இந்தியா - இலங்கை அணிகளுக்கு மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நடைபெற இருந்தது। இரவு 6।30 மணிக்கு போடப்பட்டது இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தார்।
இந்நிலையில் 7 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்த பொழுது கனமழை குறுக்கிட்டது மழை நின்றதும் மைதானத்தின் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அவுட் பீல்டு பகுதியை காயவைத்தனர் . ஆனால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்த காரணத்தால் அதை உலர வைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனாலும் பிட்ச் உலரவில்லை. இதனால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது.
உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ-தான் பணக்கார போர்டு. இவ்வளவு பணம் இருந்து்ம, இந்த நவீன காலத்தில் ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தியதால் ரசிகர்கள் கிண்டலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆளாகியுள்ளது

No comments:
Post a Comment