ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் லாபஸ்சாக்னே இரட்டை சத்தம் அடித்து அசத்தினார் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 454 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது
அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி 251 ரன்களுக்கு சுருண்டது நாதன் லியொன் ஐந்து விக்கெட்களையும் பாட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்களையும் கைப்பற்றினர் 173 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னரின் சதம் மற்றும் மரன்ஸ் அரைசதத்துடன் 217 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது
416 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு கலம் இறங்கிய நியூஸிலாந்து ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 47।5 ஓவரில் 136 ரன்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்தது இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது। லாபஸ்சாக்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனான வென்றார்
No comments:
Post a Comment