பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர் அடித்து அசத்திய வீரர்

இங்கிலாந்தின் இளம் வீரரான டாம் பாண்டன் இவரை ஐபிஎல் ஏலத்தின் பொழுது நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து பிக் பாஷ் டி20 தொடரில் இவர் அபாரமாக ஆடி வருகிறார். இன்று நடைபெற்ற போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது.
மழையின் காரணமாக போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது. பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . டாம் பாண்டன் - கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். டாம் பாண்டன் 16 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். இவர் சுழற்பந்து வீச்சாளர் அர்ஜூன் நாயர் வீசிய ஓவரில் ஐந்து பந்துகளையும் சிக்ஸர் ஆக மாற்றினார் தொடர்ந்து விளையாடிய அவர் வெறும் 19 பந்தில் 56 ரன்கள் அடித்து  ஆட்டமிழந்தார். இதனால் வரப்போகிற ஐபிஎல் சீசனில் இவரது அதிரடியை கொல்கத்தா ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர் 

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் செய்த காரியம் ரசிகர்கள் கிண்டல்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நடைபெற இருந்தது। இரவு 6।30 மணிக்கு போடப்பட்டது இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தார்।

இந்நிலையில் 7 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்த பொழுது கனமழை குறுக்கிட்டது மழை நின்றதும் மைதானத்தின் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அவுட் பீல்டு பகுதியை காயவைத்தனர் . ஆனால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்த காரணத்தால் அதை உலர வைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனாலும்  பிட்ச் உலரவில்லை. இதனால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது.

உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ-தான் பணக்கார போர்டு. இவ்வளவு பணம் இருந்து்ம, இந்த நவீன காலத்தில் ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தியதால் ரசிகர்கள் கிண்டலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆளாகியுள்ளது 

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியையும் வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின்  லாபஸ்சாக்னே இரட்டை சத்தம் அடித்து அசத்தினார் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 454 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது

அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி 251 ரன்களுக்கு சுருண்டது நாதன் லியொன் ஐந்து விக்கெட்களையும் பாட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்களையும் கைப்பற்றினர் 173 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னரின் சதம் மற்றும் மரன்ஸ் அரைசதத்துடன் 217 ரன்களுக்கு   டிக்ளேர்  செய்தது 

416 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு கலம் இறங்கிய நியூஸிலாந்து ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 47।5 ஓவரில் 136 ரன்களில்  அணைத்து விக்கெட்களையும் இழந்தது  இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது। லாபஸ்சாக்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனான வென்றார்