இங்கிலாந்தின் இளம் வீரரான டாம் பாண்டன் இவரை ஐபிஎல் ஏலத்தின் பொழுது நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து பிக் பாஷ் டி20 தொடரில் இவர் அபாரமாக ஆடி வருகிறார். இன்று நடைபெற்ற போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது.
மழையின் காரணமாக போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது. பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . டாம் பாண்டன் - கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். டாம் பாண்டன் 16 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். இவர் சுழற்பந்து வீச்சாளர் அர்ஜூன் நாயர் வீசிய ஓவரில் ஐந்து பந்துகளையும் சிக்ஸர் ஆக மாற்றினார் தொடர்ந்து விளையாடிய அவர் வெறும் 19 பந்தில் 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனால் வரப்போகிற ஐபிஎல் சீசனில் இவரது அதிரடியை கொல்கத்தா ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்
No comments:
Post a Comment